ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயர்வு
பொங்கல் விடுமுறைக்கு மக்கள் சொந்த ஊர் செல்வதால் இதை பயன்படுத்தி, தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்ட பேருந்துகளுக்கான டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து நெல்லைக்கு ரூ.4,000ம், நாகர்கோவிலுக்கும் ரூ.4,000ம் டிக்கெட் கட்டணம் பெறப்படுகிறது. சென்னையிலிருந்து கோவைக்கு ரூ.2,800 வரை வசூலிக்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




