--- --:--:-- --

ஆ.ராசா பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதா?

1

கம்யூனிஸ்ட் தலைவர்கள் குறித்த திமுக எம்.பி. ஆ.ராசாவின் சமீபத்திய பேச்சு, திமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பச்சையப்பன் கல்லூரி நிகழ்ச்சியில், பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்பியுமான ஆ.ராசா சர்வதேச கம்யூனிச தலைவர்கள், அதிலும் குறிப்பாக ரஷ்யா வீழ்ச்சிக்கு காரணமான தலைவர்கள் குறித்து பேசினார்.

 

அதில், “ஸ்டாலின் காலத்தில் நீர்த்துப் போன ரஷ்யாவை, அவருக்கு பின்னால் வந்த குருசேவ், கோர்பசேவ் ஆகியோர் பொதுவுடைமைத் தத்துவத்தால் அனைத்து மாகாணங்களையும், தேசிய இனங்களையும் ஒன்றிணைத்து பெரிய நாடாக கட்டமைத்து, அதை வல்லரசாக உருவாக்கினார்கள்.

 

ஆனாலும், ரஷ்யா சிதறுண்டு போனதற்கு என்ன காரணம்?கோர்பசேவ் என்ற தலைவர் மோசமானவர். எனவே, தத்துவம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அந்த தத்துவத்தைக் கையாளும் அடுத்த தலைமுறை தலைவர்கள் கெட்டவர்களாக இருந்தால், அந்த தத்துவம் தோல்வி அடையும். தத்துவத்தின் மீது தலைவர்கள் வைக்கும் நம்பிக்கை குறையக் குறைய தத்துவம் தோல்வி காணும். கம்யூனிசத்தில் கோளாறல்ல, அது செம்மையானது.

 

ஆனால் அந்த தத்துவத்தைக் கொண்டுவந்த தலைவர்கள் நீர்த்துப்போன காரணத்தால், சுயநலவாதிகளாக மாறிய காரணத்தால் கொள்கை தோற்றது.” என்று பேசினார்.ஆ.ராசாவின் இந்தப் பேச்சு தமிழ்நாட்டைச் சேர்ந்த கம்யூனிச தலைவர்கள் குறித்த விமர்சனமாக பார்க்கப்பட்டு, அதே கோணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் கேள்வியாக எழுப்பப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon