--- --:--:-- --

திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு வெளியான அறிவிப்பு..!

1

உலகம் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் சீனாவில் புதிய வகை வைரஸ் நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளது.எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸால் ஏற்படும் நோய் பாதிப்புகள் அதிக அளவில் வடக்கு சீனாவில் பதிவாகியுள்ளது.

 

இந்த வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டால், அந்த நபருக்கு சளி மற்றும் கோவிட்-19 போன்ற அதே அறிகுறிகள் தென்படும். இந்த நோய் பாதிப்பு தற்போது வேகமாகப் பரவி வருகிறது.இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ள நிலையில், திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இதுகுறித்து திருப்பதி மலையில் செய்தியாளர்களுடன் பேசிய திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி. ஆர். நாயுடு, எச் எம் பி வி வைரஸ் காரணமாக பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon