திருப்பூர் திருமுருகன்பூண்டியில் ஸ்ரீ மாகாளியம்மன் ஸ்ரீ கருப்பராயர் பொங்கல் திருவிழா..!
திருப்பூர்,திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காமாட்சி அம்மன், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ கருப்பராயர் பொங்கல் திருவிழா கடந்த 31 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து 6-ம் தேதி மதியம் 2 மணிக்கு விநாயகர் பொங்கல் படைக்கும் விழா நடந்தது.
இதனை தொடர்ந்து மாலை 7 மணிக்கு தலைமை ஆசிரியர் செல்வராஜ் தலைமையில் ஸ்ரீ வட்டமலை ஆண்டவர் கலைக்குழுவின் கும்மி ஆட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் கும்மி ஆட்டம் ஆடினர்.

விழாவில் கருப்பராயர் வேடம் அணிந்த ஒருவர் ஆக்ரோஷமாக நீண்ட அருவாளை ஏந்தி கொண்டு சாட்டையால் அடித்துக் கொண்டு பரவசமூட்ட ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




