--- --:--:-- --

சபரிமலை வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை..!

3

சபரிமலைக்கு வரும் வாகனங்களை அலங்கரித்து வரக்கூடாது என கேரள மாநில அரசு எச்சரித்துள்ளது. அவ்வாறு வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. சில வாகனங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 

அலங்கரிக்கப்பட்ட வாகனங்களால் பிற ஓட்டுநர்களின் கவனம் திசை திரும்பினால் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கேரள மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

மேலும் அதிக சட்டத்துடன் கூடிய ஒலிபெருக்கி அமைத்து பாடல்களை ஒளிபரப்பி வருவது கண் கவர் விளக்குகளால் வாகனங்களை அலங்கரித்து வருவது போன்றவை வனவிலங்குகளையும் பாதிப்பதாக போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சபரிமலை பாதைகளில் மோட்டார் வாகனத் துறை தொடங்கியுள்ளது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon