--- --:--:-- --

சாத்தனூர் அணையில் இருந்து சுமார் 150 முதலைகள் தப்பிச் சென்றுள்ளது..!

2

சாத்தனூர் அணையில் இருந்து சுமார் 150 முதலைகள் ஆற்றின் வழியே தப்பி சென்று விட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை எடுத்து சமீபத்தில் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

 

அப்பொழுது அணையில் இருந்தும் அருகில் உள்ள ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய முதலை பண்ணையில் இருந்தும் ஏராளமான முதலைகள் வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.

 

ஆற்றின் வெளியே தப்பிச் சென்றிருக்கலாம் என்ற அச்சம் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் இந்த விஷயத்தில் வனத்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட தவறி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon