ஜிமெயிலுக்கு பதிலாக எக்ஸ் மெயில்.. மாற்றப் போகும் எலான் மஸ்க்..!
எலான் மஸ்க் ஜிமெயிலுக்கு பதிலாக எக்ஸ் மெயிலை கொண்டு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. விண்வெளியில் மார்சில் வீடு கட்டுவதில் தொடங்கி அரசியல் பரப்புரைகள் வரை எல்லாவற்றிலும் ஏதோ ஒரு பெரிய திட்டத்துடனே செயல்பட்டு வருகிறார் எலான்மஸ்க்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் விண்வெளி ஆராய்ச்சிகள் ஏவுகணைகளை ஏவுதல் என மும்முரமாக இருந்தவர் டெஸ்லா என்ற நிறுவனத்தின் மூலம் எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தினார்.
தற்பொழுது gmail மென்பொருளுக்கு மாறாக எக்ஸ் மெயில் மென்பொருளை புதிதாக அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. புதிய மொபைலை கொண்டு வரப் போவதாகவும் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





