பிரசவத்தின் பொழுது தாயும், சேயும் உயிரிழப்பு..!
வேலூர் அரசு மருத்துவமனையில் தாயும், சேயும் உயிரிழந்த விவகாரத்தில் முறையான சிகிச்சை அளிக்காததே காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள இருமேடு கிராமத்தாய் சேர்ந்த பெண் பிரசவத்திற்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்ட நிலையில் குழந்தை இறந்து பிறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறிது நேரம் கழித்து தீவிர சிகிச்சை பிரிவிலிருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சிகிச்சை அளிக்காதே காரணம் என அவரது கணவர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் வேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





