பிரபல நடிகை காரோடு கடத்தப்பட்ட வழக்கு..வெளியான முக்கிய தகவல்..!
கேரளாவில் பிரபல நடிகை தாக்கப்பட்ட வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சினிமா சூட்டிங் முடித்துக்கொண்டு கொச்சி திரும்பிய பொழுது நடிகையை காருடன் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்து வீடியோ எடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் முதல் குற்றவாளி உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நடிகர் திலிப் எட்டாவது குற்றவாளியாக உள்ளார். நடிகை தாக்கப்பட்ட வழக்கில் இறுதி வாதங்கள் தொடங்கும் நிலையில் அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார். அவரது கார்ட்டில் அடங்கிய மெமரி கார்டை சட்டவிரோதமாக திறந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





