3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்..!

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால், தஞ்சாவூர், திருவாரூர் உட்பட 6 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது. இது, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுவடைந்து வரும் புதன்கிழமை இலங்கை-தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

இதனால், வரும் செவ்வாய்க்கிழமை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

 

இதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினத்தில் புதன்கிழமையும் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. அவற்றுடன், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்காலிலும் புதன்கிழமை கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

இதேபோன்று, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் வரும் வியாழக்கிழமை அன்று மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. வரும் 12 ஆம் தேதி காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூரில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

மேலும், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.