திருமாவளவன் டபுள் ஆக்சன்..பரபரப்பை கிளப்பிய தமிழிசை..!
விசிக தலைவர் திருமாவளவனின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டு விட்டதாகவும் திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்கவிட்டாலும் அவரது மனசாட்சி இங்கே தான் இருக்கிறது என ஆதவ் அர்ஜூனா பேசியதை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு பாத்திரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்கம், மற்றொரு பாத்திரம் விஜய் பக்கம் என திருமாவளவனின் டபுள் ஆக்சன் வெளிப்பட்டு விட்டதாக தமிழிசை விமர்சித்துள்ளார். இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் வலுவாக இல்லை என்பதையே இது காட்டுவதாகவும் திருமாவளவனின் உண்மையான நேரம் தெரியவரும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





