திருவண்ணாமலையில் வரும் 13ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற உள்ள நிலையில், கொப்பரை வைக்கும் இடத்தில் இருந்து 400 அடிக்கு மண் சரிவும், அரைமலை பகுதியில் இருந்து சுமார் 600 அடிக்கு கீழ் மற்றொரு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில், மக்கள் யாரும் சிக்கி இருக்கிறார்களா என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. சமீபத்தில், மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.