அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு..!

பெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. பெஞ்சல் புயலால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

 

இதனை ஒட்டி இந்த மாவட்டங்களில் மட்டும் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மூன்று மாவட்டங்களிலும் வரும் ஜனவரி 2ஆம் தேதி முதல் 10ஆம் தேதிக்குள் அரையாண்டு தேர்வு நடத்திட அந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

அதே வேளையில் மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரையிலான அரையாண்டு விடுமுறை காலம் பொருந்தும் எனவும் பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.