திமுக அரசு படு தோல்வி : ராமதாஸ்

ழை வெள்ள பாதிப்புகளை தடுப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்திருப்பதாக ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். திண்டிவனம் அருகே உள்ள இடத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் மழை வெள்ள பாதிப்பால் 20 பேர் உயிரிழந்திருப்பதாகவும் செயல்பட்டு இருந்தால் பேரிழப்பை தவிர்ந்திருக்கலாம் எனவும் கூறினார்.

 

சாத்தனூர் அணை திறக்கப்படுவதாக நள்ளிரவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அது மக்களிடையே சென்றடையவில்லை என குறிப்பிட்ட ராமதாஸ் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் நான்கு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

 

வெள்ளம் பாதித்த பகுதிகளின் அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெறுகிறது என்ற மாயை தோற்றத்தை உருவாக்க தமிழக அரசு முயற்சித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.