ஓசூர் அருகே கலப்பட நெய் தயாரிப்பதாக எழுந்த புகாரால் தனியார் தொழிற்சாலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட கோவிந்தா பிரகாரம் பகுதியில் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கலப்படம் உற்பத்தி செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது.
தொழிற்சாலைக்கு நேரில் சென்ற உணவு பாதுகாப்பு துறையினர் பூஞ்சை படிந்த 125 கிலோ வெண்ணையை பினாயில் ஊற்றி அளித்தனர். மேலும் இது குறித்து தொழிற்சாலை அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.