அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய பாஜக பெண் பிரமுகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விழுப்புரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடந்த மூன்றாம் தேதி அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார்.
அப்பொழுது அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் விளம்பரத்திற்காக இதுபோன்று செயல்களில் ஈடுபடுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். பொன்முடி மீது சேற்றை வீசிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாஜக பெண் பிரமுகர் ராணி ராமகிருஷ்ணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திமுக அரசின் செயல்பாட்டை சமூக வலைதளத்தில் விமர்சித்த மயிலாடுதுறை அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் சந்திரசேகரை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். அப்பொழுது வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகரனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.