ஓடும் ரயில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரருக்கு வேலூர் போக்சோ நீதிமன்றம் எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
உதகை ராணுவ கல்லூரியில் டிரைவராக பணியாற்றி வரும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த யோகேந்திர சிங் வயல்வான் கடந்த 2018 ஆம் ஆண்டு திருப்பதிக்கு ரயிலில் சென்ற பொழுது கேரளாவை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அவரை சகப் பயணிகள் பிடித்து காட்பாடி ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.