திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே டூவீலரில் லிப்ட் கொடுத்தவரை நண்பருடன் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கடம்பத்தூரை சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் அபிஷேக் டூவீலரில் சென்றுள்ளார்.
அப்பொழுது லிப்ட் கேட்டு ஏறியவர் செல்போனில் பேசி மற்றொருவரை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வரவழைத்து வழிப்பறி செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.