நடுக்கடலில் சிக்கி தவித்த மீனவர்கள்..10 பேர் பத்திரமாக மீட்பு..!
கடலூர் அருகே நடுக்கடலில் கப்பல் இறங்கு தலத்தில் தவித்த ஆறு மீனவர்கள் உட்பட 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இரண்டு பைபர் படகுகள் மூலம் கடலுக்குள் சென்ற நிலையில் கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்தனர்.
அங்குள்ள தனியார் ரசாயன தொழிற்சாலைக்கு சொந்தமான கப்பல் இறங்குதலத்திற்கு சென்று அவர்கள் உயிர் தப்பினர். கடல் சீற்றம் காரணமாக அந்த பகுதிக்கு படகில் சென்று வருவது சிரமம் என்பதால் புயல் கரையை கடக்கும் வரை மீனவர்கள் ஆறு பேரும் கப்பல் இறங்கு தளத்திலேயே இருப்பார்கள் என மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





