மத்திய காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். அகதிகள் முகாமிற்கு அருகே நடந்த நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் மசூதி மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
இதேபோன்று ரஃபா எல்லை பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். 14 மாதங்களாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்து வரும் மோதலில் இதுவரை 44,200 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து காசாவிலும் போர் நிறுத்தம் கொண்டு வர அரபு நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் மக்களும் போர் நிறுத்தம் ஏற்படுமா என்று எதிர்பார்த்து உள்ளனர்.