--- --:--:-- --

திருச்செந்தூரில் 80 அடிக்கு மேல் உள்வாங்கிய கடல்..!

6

திருச்செந்தூரில் திடீர் என 80 அடிக்கு கடல் நீர் உள்வாங்கிய நிலையில் ஆபத்தை உணராமல் மக்கள் பாறைக்குள் நின்று செல்பி எடுத்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

 

இந்த நிலையில் திருச்செந்தூரில் காலை முதலே கடல் சீற்றம் காணப்பட்ட நிலையில் 80 அடிக்கு மேல் கடல் நீர் உள்வாங்கியது. 500 மீட்டர் தூரத்திற்கு பச்சை படிந்த பாறைகள் வெளியே தெரிந்த நிலையில் மக்கள் ஆபத்தை உணராமல் அதன் மீது ஏறி நின்று செல்பி எடுத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon