ஈவிஎம் வேண்டாம்..மீண்டும் வாக்குச்சீட்டு முறை வேண்டும்..!
மின்னணு வாக்கு இந்திரங்களுக்கு பதிலாக மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஹரியானாவில் காங்கிரஸ் தோல்விக்கு வாக்கு பதிவு செயல் முறையை காரணம் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருக்கின்றோம் என்றும் சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா பேரவை தேர்தலிலும் காங்கிரஸ் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காரணம் எனவும் குற்றம் சாட்டினார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை, அது தேவையும் இல்லை என்று கூறிய மல்லிகார்ஜுன கார் கேம் வாக்குச்சீட்டு முறையே தங்களுக்கு வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்தினால் பாஜகவின் உண்மையான நிலை என்ன என்பது தெரிந்து விடும் என்றும் மீண்டும் வாக்கு சீட்டு முறையை வலியுறுத்தி நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் எனவும் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





