தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை ..!
தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்து உள்ளார்.வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கனமழை காரணமாக நவம்பர் 20ஆம் தேதி விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யம் வகையில் இன்று பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை, நீக்கம் மற்றும் திருத்தம் முகாம் நடைபெற உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வரும் 30ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்து உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





