மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே கார் செல்வதற்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் காவலரை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ராஜ்குமார் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டிக்கு செல்வதற்காக மண்டே நகர் சந்திப்பு பகுதியில் பேருந்திற்காக காத்திருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அருகில் உள்ள மெட்ரோவில் இருந்து வெளியே வந்த கார் ஓட்டுனர் ஆறுமுகத்திற்கு வழி விடுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது வாக்குவாதம் முற்றி காவலர் ராஜ்குமார் ஆறுமுகம் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.