இன்டர்வியூக்கு சென்ற இளம்பெண் கடத்தல்..கழுத்தில் வைக்கப்பட்ட கத்தி..!

திருப்பூரில் வேலைக்காக நேர்காணலுக்கு சென்ற இளம்பெண்ணை காரில் கடத்திய இருவரை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பூர் மன்னரை பகுதியை சேர்ந்த கமலி என்பவர் ஆன்லைனில் ஓஎல்எக்ஸ் வேலை கேட்டு பதிவு செய்துள்ளார்.

 

அவரை நேர்காணலுக்காக அழைத்ததால் அவர் கடந்த 7ஆம் தேதி காரில் வந்த இரண்டு நபர்கள் கமலுக்கு காரில் ஏறுமாறு கூறியுள்ளனர். கார் வெகுதூரம் சென்றதால் சந்தேகம் அடைந்த கமலி தன்னை இறக்கி விடுமாறு சத்தம் போட்டு உள்ளார்.

 

அப்பொழுது முன் இருக்கையில் இருந்தவர் இறங்கி பின் வந்து கமலியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளார். கார் தாராபுரம் சாலையில் உள்ள ஏஞ்சல்ஸ் கல்லூரி அருகே சென்றதும் அருகில் இருந்த நபரின் கையில் இருந்த கத்தியை தட்டி விட்டு காரிலிருந்து கீழே குதித்துள்ளார்.

 

இதில் காயமடைந்த கமலியை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருப்பூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.