காங்.,க்கு மக்கள் தோல்வியை பரிசளிப்பார்கள்: அமித் ஷா

வீர சாவர்க்கரை புகழ்ந்து பேசும்படி ராகுலிடம் உத்தவ் தாக்கரே வலியுறுத்துவாரா என அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். மராட்டியத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், பால் தாக்கரேவை அவமதிக்கும் காங்கிரஸ் கட்சியுடன், சிவசேனா(உத்தவ் அணி) கூட்டணி வைத்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

 

மராட்டிய மக்கள் அவர்களுக்கு மீண்டும் தோல்வியை பரிசளிப்பார்கள் என்றும் சூளுரைத்தார். வரும் நவ.20இல் அங்கு தேர்தல் நடக்கிறது.