ஜார்க்கண்ட் மாநிலத்தை ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி கொள்ளையடித்து வருவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
அம்மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், மாநிலத்தை ஆண்டவர்கள் ஊழல் செய்வதையே கொள்கையாக வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டினார். இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைப்பவர்களின் திட்டங்களை பாஜக முறியடிக்கும் எனவும் உறுதியளித்தார்.