பட்டியலின மாணவன் மீது கொலை வெறி தாக்குதல்..!

நெல்லை அருகே தன் மீது மோதுவது போல் காரில் சென்றவர்களை கேள்வி எழுப்பிய பட்டியலின மாணவனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டி ஒரு கும்பல் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

 

நெல்லை மாவட்டம் மேலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது திருவிடைமருதூர் நோக்கி வேகமாக சென்ற கார் ஒன்று மாணவன் மீது மோதியபடி சென்றதாக தெரிகிறது.

 

இதனையடுத்து அந்த மாணவர் ஏன் மோதுவது போல் செல்கிறீர்கள் என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் காரில் இருந்தவர்கள் மேலும் பலரோடு வந்து வீட்டில் தனியாக இருந்த மாணவனை அரிவாளாலும் பீர் பாட்டிலாலும் தாக்கியுள்ளனர்.

 

இதில் காயம் அடைந்த மாணவன் திருநெல்வேலி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாதி பெயரை சொல்லி அந்த கும்பல் தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவர்களை மாணவனின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.