திருவாடானை தாலுகா தலைமை இடத்தில் அவலம்..அடிப்படை வசதி இல்லாத அரசு துவக்க பள்ளிக்கூடம்..கழிப்பிடத்தில் நோய்த் தொற்று அபாயம்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் மதிக்காத அதிகாரிகள்..!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இந்த துவக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 62 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

 

தாலுகா அலுவலகம், துணை கண்காணிப்பாளர்,  வட்டார கல்வி  அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு   மிக அருகில் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 62 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
தற்போது கல்வி பயின்று வரும் கட்டிடமும் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

 

இந்த வகுப்பறை கட்டிடம் சேதமடைந்து இருந்த அதனை 2023 – 2024ம் ஆண்டு நிதியில் மராமத்து செய்து உள்ளனர். தற்போது பெய்த மழையில் ஊறல் எடுத்து ஆபத்தான நிலையில் உள்ளது. சுத்தமான குடி தண்ணீர் இல்லை.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக பள்ளிக்கூட மாணவமாணவிகள் களுக்கு குடிதண்ணீர் வசதி இல்லை, மாணவ மாணவிகள் கழிப்பிடம் செல்ல உரிய கழிப்பிடம் வசதி இல்லை, ஆனால் ஐந்துக்கும் மேற்பட்ட கழிப்பிட கட்டிடங்கள் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த கட்டிடங்களுக்கு செல்லும் வழியும் இருக்கும் ஒரு கட்டிடமும் மிகவும் ஆபத்தான நிலையில் இடிந்து விடும் நிலையில் இருப்பதால் அதை கடந்து மாணவ மாணவிகள் செல்வதில் பெரும் விபத்து அபாயம் உள்ளது.

இதுகுறித்து அக் 16ல் திருவாடானையில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சமூக ஆர்வளர்கள் நேரில் உங்கள் ஊரில் உங்களை தேடி திட்டத்தில் வந்திருந்த பொழுது நேரடியாக குறை சொல்லப்பட்டது உடனடியாக உடனடியாக தாலுகா தலைமையிடம் என்பதால் நிவர்த்தி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

அவரது உத்தரவை மதிக்காத அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை மாவட்ட அதிகாரியை ஏமாற்றும் விதமாகவே நடந்து கொள்கின்றனர். எது எப்படி இருந்தாலும் மாணவ மாணவிகள் தற்போது ஆபத்தான நிலையில் கட்டிடத்தில் கல்வி பயின்று வரும் நிலையிலும் கழிப்பிடம் செல்லும் வழியிலும் கழிப்பிடமும் வசதியும் இல்லாத அவல நிலையில் இந்த இயந்திர  விஞ்ஞான காலத்தில் இந்த அவலம் இருப்பது மிகவும் வருத்தம் அளிப்பதாக பெற்றோர் ஆசிரியர் கழக தினர் தெரிவித்தனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏதாவது விபரீதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.