--- --:--:-- --

நான் ரேஷன் அரிசி தான் சாப்பிடுகிறேன் – வெங்கட்ரமணன் விளக்கம்

9

சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில், சென்னை மாநகராட்சியில் மூலதன நிதியின் கீழ் ரூ. 8.49 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட நாகேஸ்வர ராவ் பூங்காவை உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வெங்கட்ரமணனிடம் பொன்னி அரிசி சாப்பிடுவதை மக்கள் சோஷியல் ஸ்டேட்டஸாக பார்க்கிறார்கள் என பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அது ஆங்கிலத்தில் சொல்லும்போது கருத்து வேறுபடும். மக்களின் விருப்பம் என்றுதான் நான் சொன்னேன்.

 

 

எப்பவுமே நகர்புற மக்களின் ஆர்வம் வேறாக இருக்கும், நகர்புற தன்மைகள் மாறுபட்டு இருக்கும், இங்கு உள்ள தண்ணீர் மாறுபட்டு இருக்கும். நான் ரேஷன் அரிசி தான் சாப்பிடுகிறேன். சிறு வயதில் இருந்து ரேஷன் அரசி தான் சாப்பிடுகிறேன். சோஷியல் ஸ்டேட்டஸ் என்பது மக்கள் சந்தோஷத்திற்காக சாப்பிடுவது. வார இறுதி நாட்களில் சனி, ஞாயிறுக்கிழமைகளில் வெளியில் சென்று சாப்பிடுவோம். அது ஒரு சந்தோஷம், நம்ம குடும்பத்திற்காக செலவிடும் நேரம் அது. அதைத்தான் சொன்னேன்” என்றார்.

 

 

மேலும், “வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசின் கிடங்கில் இருந்து கொள்முதல் செய்து அமுதம் அங்காடி மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் வெளி மார்க்கெட்டை விட குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம். மலிவு விலையில் 1 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை காெள்முதல் செய்து, குறைந்தபட்சம் 5 கிலோ அரிசியை எல்லா ரேஷன் கடைகளிலும் 30 ரூபாய்க்கு வழங்குகிறோம். ரேஷன் கடையில் பொன்னி அரிசி போல் அரிசியை போடுவோம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொன்னார்.

 

 

தமிழ்நாடு அரசை பொருத்தவரை சன்ன ரக அரிசி என்பதை தான் பொன்னி அரிசி என்று சொல்கிறோம். மக்கள் இதைத்தான் சாப்பிட வேண்டும் என்று நான் கட்டாயப்படுத்த மாட்டேன். ஒவ்வொரு மக்களின் வாழ்வாதாரமும் மிக முக்கியம், அதுக்காக தான் நாங்கள் 7 நாட்களும் ஓடுகிறோம்” எனத் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon