விபத்து ஏற்படுத்தி விட்டு நெஞ்சு வலிப்பதாக நடிக்கும் கார் ஓட்டுனர்..!
சென்னை கிளப் கடற்கரை சாலையில் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு ஓடிய காரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். ஈசிஆர் சாலை திருவான்மியூரில் இருந்து நீலாங்கரை நோக்கி சென்ற கார் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியோரை கார் மோதி விட்டு நிற்காமல் சென்றது.
சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதிவிட்டு சென்ற அந்த காரை மாற்ற வாகன ஓட்டிகள் துரத்தி சென்று சுற்றி வளைத்து பிடித்தனர். அப்பொழுது காரை ஓட்டி வந்த இளைஞர் நெஞ்சுவலி ஏற்படுவது போல் நடித்ததாகவும் அவர் கூலிப் எனப்படும் போதே பொருளை பயன்படுத்தியதும் தெரிய வந்தது.
இது குறித்து காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் அங்கு விசாரணை மேற்கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





