மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை..!

க்டோபர் மாத தொடக்கம் முதலே ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7,375க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.59,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

இந்நிலையில் இன்று  ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.59,520க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதேபோல், 18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.49,040க்கும், கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.6,130க்கும் விற்பனை செய்யப்படுகிறது.