--- --:--:-- --

ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை..!

4

மிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் அவதி அடைந்தனர். கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான கர்நாடகாவின் குடகு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் உபரி நீர் திறப்பு வினாடிக்கு 17,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

 

மேலும் நீர்வரத்து அதிகரிக்கலாம் என்பதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசில் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனிடையே ஒகேனக்கல் அருவிக்கு வந்த பயணிகள் நீர்வீழ்ச்சியின் அழகை ரசித்துவிட்டு திரும்பினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon