பாகிஸ்தானில் டிப்டீரியா நோய்க்கு நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாக்டீரியாவால் இந்த நோய் ஏற்படுகிறது.
இந்த கிருமிகள் தொண்டையை பாதித்து சுவாசத்தையும் உணவு விழுங்குவதையும் தடுப்பதால் தமிழில் தொண்டை அடைப்பான் என்று அழைக்கப்படுகிறது.
பெரும்பாலும் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் வயதானவர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயை குணப்படுத்த தேவையான மருந்து பற்றாக்குறையால் பாகிஸ்தானில் நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.