ஏரியல் மூழ்கிய லாரி ஓட்டுனர்..சடலத்தை தேடும் தீயணைப்பு துறையினர்..!
தாம்பரம் அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்த லாரி ஓட்டுனரின் உடலை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை தாம்பரம் அடுத்த சோமங்கலம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் லாரி ஓட்டுவதாக பணிபுரிந்து வந்தார்.
இவர் அந்த லாரியை நல்லூர் ஏரியில் இறக்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். பின்னர் ஏரியில் குளிக்க சென்ற பொழுது ஆழமான பகுதியில் நீரில் மூழ்கி மாயம் அடைந்தார். அப்பொழுது அந்த பகுதி மக்கள் நீண்ட நேரம் கார்த்திக்கை தேடியும் அவர் கிடைக்காததால் இது குறித்து சோமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதனை பேரில் இலங்கை சென்ற போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் லாரி ஓட்டுனரின் உடலை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





