குடிபோதையில் காரை இயக்கிய இளைஞர்கள்.. பைக்கில் வந்தவர் பலி..!
காரைக்காலில் போதையில் காரை ஓட்டிய இளைஞர்களால் ஏற்பட்ட சாலை விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. புதுச்சேரி மாநிலம் திருப்பட்டினம் புறவழிச்சாலையில் காரைக்காலில் இருந்து வந்த சொகுசு கார் பேரிகார்டு வைத்திருந்த இடத்தில் அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்தது.
இதில் அந்த கார் இருசக்கர வாகனத்தில் வந்து மற்றொரு நபர் மீது அதிவேகமாக மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் காரில் மது போதையில் இருந்த ஆறு இளைஞர்கள் விபத்தை ஏற்படுத்திவிட்டு சில காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்து வந்த காவலர்கள் உயிரிழந்தார். பாலசுப்பிரமணியம் என்பவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





