காதல் திருமணம் செய்த ஜோடி..திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார்..!
பெரம்பலூரில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். பெரும்புதூரில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கேப்ரியல் என்பவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த திவ்யா என்பவரும் அவரை காதலித்து வந்துள்ளார் . திவ்யா வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்த நிலையில் திவ்யாவிற்கு இது தெரிய வந்துள்ளது. கேப்ரியும் திவ்யாவும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு இருப்பதால் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டி தஞ்சம் அடைந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





