--- --:--:-- --

தீபாவளி பண்டிகை..தமிழக அரசு அறிவிப்பு..!

2

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க இணையதளம் வழியாக விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக மட்டுமே உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் என்று வருவாய் முதன்மை அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விண்ணப்பங்களை 19ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அதன் பிறகு புறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தை கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon