--- --:--:-- --

கொடைக்கானலில் இ பாஸ் நடைமுறை தொடரும்..!

6

கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கான ஐ பாஸ் நடைமுறை நீதிமன்ற மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தொடரும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிடவும் கடந்த மே மாதம் 7ம் தேதி இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.

 

இந்த நிலையில் இ-பாஸ் நடைமுறை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கான இ-பாஸ் நடைமுறை நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தொடரும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 

இதுவரை 2 லட்சத்து 91 ஆயிரத்து 561 வாகனங்கள் பதிவு செய்த நிலையில், ஒரு லட்சத்து 9,636 வாகனங்கள் மட்டுமே நகருக்குள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon