குழந்தைகளை கோயிலுக்குள் அழைத்துச் சென்று பூசாரி பாலியல் தொல்லை..!
தேனியில் குழந்தைகளை கோவிலுக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த பூசாரியை காவல்துறையினர் கைது செய்தனர். கோவிலுக்கு முன்பாக குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது கோயில் பூசாரி இரண்டு குழந்தைகளை இனிப்பு வழங்கி அவர்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோருக்கு தெரிவித்ததால் அக்கம் பக்கத்தினர் அனைவரும் கோயிலின் முன்பாக திரண்டனர்.
தாக்கமும் ஏற்பட்டதால் உடனடியாக கோவில் பூசாரி கோயில் கதவை பூட்டிவிட்டு உள்ளே சென்று விட்டார். அங்கு வந்த காவல்துறையினர் பூசாரியிடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





