--- --:--:-- --

தொழில்நுட்பக் கோளாறு..சிக்னல் கிடைப்பதில் சிக்கல் தாமதமாக புறப்பட்ட ரயில்..!

4

தொழில்நுட்ப கோளாறு காரணமாக செங்கோட்டை தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். செங்கோட்டையில் இருந்து மாலை 4:15 மணியளவில் கிளம்பும் ரயில் தென்காசிக்கு 4.30 மணி அளவில் வந்தடைவது வழக்கம்.

 

ஆனால் இன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிக்னல் கிடைக்காததால் சுமார் 45 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டது. இதனால் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

 

சிக்னல் ஒயர் அறுந்ததால் இந்த பிரச்சனை ஏற்பட்டது என்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல் புறப்பட்டு சென்றது எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon