பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது..!
நிலத்தை போலி பத்திரபதிவு செய்த வழக்கில் சேலம் மற்றும் மதுரை பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் சிபிசிஐடி காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். பல குழு ரூபாய் மதிப்புள்ள கங்கம்மாள் என்பவர் பெயருக்கு போலி ஆவணங்கள் மூலம் மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் தென் சென்னையில் பணியாற்றிய பொழுது வரதராஜபுரம் பகுதியில் ஹமீது என்பவருக்கு சொந்த நிலத்தை போலி ஆவணம் மூலம் மாற்றியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. பத்திரப்பதிவு உதவியாளர்கள் சார்பதிவாளர் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் போலி பத்திரப்பதிவுக்கு டிஐஜி இரவீந்திரநாத் காரணம் என்று தெரியவந்துள்ளது.
மேலும் எட்டு முறை வில்லங்க சான்றிதழ் முறைகேடாக மாற்றப்பட்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து ரவீந்திரநாத்தை சிபிசிஐடி காவலர்கள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





