தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் – 2 தேர்வு நடைபெற உள்ளது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில் தமிழ்நாட்டில் இன்று குரூப் – 2 தேர்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் பல பள்ளிகள் தேர்வு மையங்களாக செயல்பட்டு வருகிறது.
எனவே அந்த பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.இந்நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றமும் பரிந்துரை செய்திருந்தது.
மேலும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், குரூப் – 2 தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சனி மற்றும் நாளை ஞாயிறு விடுமுறை, செவ்வாய்க் கிழமை மிலாடி நபி அரசு விடுமுறை என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.