ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மேலத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பால்குட, பூக்குழி உற்சவ திருவிழா கடந்த செவ்வாய்கிழமை காப்பு கட்டுகளுடன் துவங்கி நடைபெற்று வந்தது.
அதனை தொடரிற்கு அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று இரவு பக்தர்கள் கும்மிஅடித்து கொண்டாடி அருள் பெற்றனர்.
இன்று பேருந்து நிலையம் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் முன்பு இருந்து பால்குடம், வேல் காவடி, பறவை காவடி, அறிவால் காவடியுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் பெண்கள் அனைவரும் பால் குடம் எடுத்து பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்தனர். வழி நெடி சிலும் பட்டாசு, வெடி வெடிக்கு காப்பு கட்டப்பட்டு பக்தர்கள் மேலதாளத்துடன் திருவாடானை நகர் முழுவதும் வீதி உலா வந்தனர்.
அதனைத் தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குயில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நிகழ்வினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு அருள்பெற்றனர். அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்