மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய வேதியியல் ஆசிரியர்..!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே அரசு பள்ளி மாணவர்களிடம் பாலியல் புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்செங்கோட்டை அடுத்த விட்டம்பாளையம் பகுதியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
அங்கு வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வரும் வேலுச்சாமி என்பவர் மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி தொல்லை கொடுத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இது குறித்து மாணவர்கள் ஏழு பேர் பள்ளியின் தலைமை ஆசிரியரிடமும் புகார் அளித்த நிலையில் தகவல் அறிந்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உடனடி விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் மாவட்ட கல்வியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் பள்ளிக்கு விரைந்து மாணவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





