திடீரென கடலில் குதித்த பெண்..காப்பாற்றிய கார் ஓட்டுநர்..!
மும்பையில் பாலத்தில் இருந்து குதிக்க முயன்ற பெண்ணை கண்ணிமைக்கும் பொழுது காப்பாற்றிய கார் ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. வாடகை காரில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் கடலில் காட்சிகளை பார்க்க வேண்டும் எனக்கூறி காரை நிறுத்த சொல்லியுள்ளார்.
கீழே இறங்கிய அவர் தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றார். இதனை பார்த்த ஓட்டுநர் அந்த பெண்ணை தடுக்க முயன்ற பொழுது அவர் திடீரென கீழே குதித்தார்.
ஓட்டுநர் கணப்பொழுதில் பெண்ணின் தலை முடியை பற்றி அவரைப் பிடித்துக் கொண்டார். காவல்துறையினரும் சிறிதும் தாமதிக்காமல் களத்தில் இறங்கிப் பெண்ணின் உயிரை காப்பாற்றினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





