நடிகை சமந்தா குறித்து பேசிய நாக சைதன்யாவின் வருங்கால மனைவி சோபிதா..!

பாலிவுட் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சோபிதா துளிப்பாளா. ராமன் ராகவ் 2.0 தான் இவருடைய அறிமுக திரைப்படமாகும். இதன்பின் தெலுங்கில் என்ட்ரி ஆனார். மலையாளத்தில் படங்கள் நடிக்க துவங்கினார்.

 

தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடித்து வந்த சோபிதா, மணி ரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தார். முதல் படமே அவருக்கு தமிழ் திரையுலகில் நல்ல வரவேற்பை ஏற்ப்படுத்தி கொடுத்தது. படங்களை விட இவருடைய வெப் தொடர்கள் தான் ரசிகர்களிடையே பிரபலமாக இருக்கிறது.

 

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் நடிகை சோபிதா நெருங்கி பழகி வருவதாகவும், இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்கள் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், இருவரும் தங்களுடைய நிச்சயதார்த்தத்தை அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் என சொல்லப்படுகிறது.

 

நாக சைதன்யாவின் முன்னாள் மனைவி நடிகை சமந்தா என்பதை நாம் அறிவோம். இந்த நிலையில், நடிகை சோபிதா நடிகை சமந்தா குறித்து பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

 

இதில் ” சமந்தாவின் சினிமா பயணம் சூப்பர் கூல். அவருடைய திரை படங்களை எடுத்துப்பாருங்கள், அவர் அதனை கையாண்ட விதம் உண்மையாகவே கூல்” என கூறியுள்ளார். மேலும் நடிகை ராஷ்மிகா குறித்து வசீகரமானவர் என்றும், தனது வருங்கால கணவர் நாக சைதன்யா கண்ணியமாவர் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார் சோபிதா.