--- --:--:-- --

திடீரென வயலில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்..திரண்ட கிராமத்தினர்..!

3

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே சென்னை தாம்பரத்திலிருந்து பயிற்சிக்காக வானில் பறந்து விமான பணிக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் திடீரென பழுது ஏற்பட்டு அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

 

ஹெலிகாப்டரில் இயந்திர கோளாறு காரணமாக பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கோளாறை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டரை காண்பதற்கு அருகில் உள்ள கிராம பகுதியில் இருந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளதால் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon