சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்..அப்படியே ரோடு போட்டு சென்ற ஊழியர்கள்..!
ஈரோட்டில் சாலையில் நிறுத்தி வைத்திருந்த காரை அகற்றாமல் தார் சாலை அமைக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணம்பாளையம் ஜீவா நகரில் கடந்த 26 ஆம் தேதி புதிதாக தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்பொழுது சாலையோர நிறுத்தி வைத்திருந்த காரை அகற்றாமல் ஒப்பந்ததாரர்கள் அதனை சுற்றியும் சாலை அமைத்துள்ளனர்.
இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





