--- --:--:-- --

திருச்சியில் ஆசிரியரை வெட்டிய மாணவன்..!

10

திருச்சியில் பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற ஆசிரியரை கத்தியால் மாணவர் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இடையே இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த வீடியோவிற்கு கமெண்ட் செய்த விவகாரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி வளாகத்தில் இரண்டு மாணவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதை பார்த்த வணிகவியலாசிரியர் சிவக்குமார் ஓடிச் சென்று மாணவர்களை தடுக்க முயன்றுள்ளார்.

 

அப்பொழுது ஒரு மாணவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆசிரியரின் தலையில் கத்தியுடன் மற்றொரு மாணவரின் கையில் வெட்டிவிட்டு ஓடிவிட்டார், உடனடியாக காயம் அடைந்த ஆசிரியர், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

 

ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் பள்ளி வளாகத்திலேயே ஆசிரியரை மாணவர் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon